Asianet News TamilAsianet News Tamil

துணிவு பட கொண்டாட்டத்தில் உயிர்பலி; இளைஞர்களுக்கு டிஜிபி அறிவுரை

படித்து வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் இது போன்ற ஆபத்தான செயல்களில் இளைஞர்கள் ஈடுபடக் கூடாது என் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TN DGP Sylendra Babu request to youngsters to avoid unsafe celebration while cinema releasing times
Author
First Published Jan 12, 2023, 2:09 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கம், தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில், அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டியில் (AIPDM) வெற்றி  பெற்ற காவல் அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளார்களிடம் பேசுகையில், தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டார்கள்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் பதக்கங்களை வழங்குவார். இதில் வெற்றி பெற்ற அனைத்து மாநில காவல்துறையினரும் பங்கு பெறுவார்கள். மேலும் ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மேம்படுத்தப்படும்.

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழக காவல்துறையில் விரைவில் பத்தாயிரம் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன் பின்னர் காவலர்கள் தட்டுப்பாடு நீக்கப்படும். ஆயிரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு  பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் போது தமிழக காவல்துறை இளமையான காவல்துறையாக மாறும் 81 டிஸ்பி க்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

சினிமா படங்கள் வெளியாகும் பொழுது பாதுகாப்பு இல்லாத காரியங்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது. வாகனங்களில் மீது ஏறுவது, கட் அவுட்டுக்கள் மீது ஏறுவது மிகவும் ஆபத்தானது. இதுபோன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடக்கூடாது.

700 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவிலில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய காவல்துறையினர்

படித்து வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் இளைஞர்கள் இது போன்று டேங்கர் லாரி, கட்அவுட்களில் ஏறி உயிரிழக்கும் பொழுது ஒட்டுமொத்த குடும்பமே சிரமத்திற்கு உள்ளாகிறது. ஆகவே இளைஞர்கள் இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios