வரும் 17 ஆம் தேதி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்..? எத்தனை நாட்கள் நடைபெறுகிறது..? வெளியான தகவல்

தமிழக சட்டப்பேரவை வரும் 17 ஆம் தேதி கூடவுள்ளதாகவும்  தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

TN Assembly Meeting likely to expected on 17th October

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்ட மசோதா கொண்டுவரப்படுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கூட்டத்தொடரின் இறுதிநாளில் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க:6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி..!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பின்னர், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவலக குழு கூட்டப்படும். அதில்  கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios