TN Agri Budget :இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் நோக்கில் அதில் ஆர்வமுள்ள விவசாயிகள் சிறப்பாகச் செயல்படுவதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, ரூ.71 கோடியில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று வேளாண் பட்ஜெட்டில் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் நோக்கில் அதில் ஆர்வமுள்ள விவசாயிகள் சிறப்பாகச் செயல்படுவதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, ரூ.71 கோடியில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று வேளாண் பட்ஜெட்டில் வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தமிழக அரசு தனது 2-வது மற்றும் முழுமையான வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசியதாவது:
மாநில வேளாண் வளர்ச்சித்திட்டம்
விவசாயிகளின் தேவையை நிறைவேற்றவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும் பல்வேறு கூறுகளை, அம்சங்களைக் கொண்ட மாநில வேளாண் வளர்ச்சித்திட்டம் புதிதாக வரும் நிதியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்காக முதல் கட்டமாக ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் 10 அம்சங்கள் உள்ளன.
1. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க கடந்த ஆண்டு நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. வரும் நிதியாண்டில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், சத்தான உணவு தானியங்களை விளைவிக்கவும் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய இயற்கை வேளாண் உற்பத்தி, உழவர் உற்பத்தியாளர் கொண்ட 100 குழுக்களுக்கு ரூஒருலட்சம் நிதியுதவி வழங்கப்படும். பாரம்பரிய இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, 7,500 ஏக்கர் பரப்பளவில் 150 இயற்கை வேளாண்மை தொகுப்புகள் உருவாக்கப்படும் இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2. அறுவடை காலத்தில் விவசாயிகளின் விளைச்சல் நெல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, விசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும். இதன்படி ரூ.5 கோடியில் 60ஆயிரம் விவசாயிகளுக்கு மானியத்தில் தார்பாய்கள் வழங்கப்படும்.

3. தென்னை வளர்ச்சிக்காகவும், தென்னை விவசாயத்தில்ஊடுபயிர் விளைச்சல், நோயிலிருந்து காத்தல் உள்ளிட்ட பல்வேறு ஊக்க நடவடிக்கைகளுக்காக ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4. நெல்ஜெயராமன் மரபுசார் நெல்ரக பாதுகாப்புஇயக்கம் சார்பில் அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கரில் பாரம்பரிய ரக விதைநெல் உருவாக்கப்பட்டு 20ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் இதற்காக ரூ.75 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
5. கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் நெல்லுக்கு பதிலாக மாற்றுப்பயிர்களான எண்ணெய் வித்துகள், பயிறுவகைகள், சிறுதானியங்கள் பயிரிடுவதற்காக 66ஆயிரம் ஏக்கரில் திட்டம் வகுக்கப்படும் இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.

6. நெல் அறுவடைக்குப்பின் பயறு சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
7. நெல்உற்பத்தி திறனை அதிகரிக்க குழித்தட்டு முறையில் நாற்றுகள் வளர்க்கப்பட்டு நடவு செய்யும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். மயிலாடுதுறைதிருக்கடையூரில் 250ஏக்கரில் குழித்தட்டு நாற்றுகள் உருவாக்கப்பட்டு செயல்விளக்கம் அளிக்கப்படும்.
8. 5 லட்சம் ஏக்கரில் வரப்பு பயிர்சாகுபடியை ஊக்கப்படுத்த, கூடுதல் வருமானம் பெறுவதற்காக பயறு விதைகள் மானியத்தில் வழங்கப்படும். இதற்காக ரூ.3 கோடி மானியமாக வழங்கப்படும்.
9. நெல் கூடுதல் விளைச்சல் பெறுவதற்காக துத்தநாகம், சல்பேட், ஜிப்சம் ஆகியவை ரூ.5 கோடி மானியத்தில் தலா ஒரு லட்சம் ஏக்கர் பரப்புக்கு வழங்கப்படும்

10. 2022-23ம் ஆண்டில் தமிழக விதை மேம்பாட்டு முகமை மூலம் 30ஆயிரம் மெட்ரிக் டன் நெல், பயிறுவகைகள், எண்ணெய்வித்து விதைகள் உருவாக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும்
11. வேளாண் கருவிகள் தொகுப்பில் 2022-23ம் ஆண்டில் 50ஆயிரம் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் ரூ15 கோடி மானியத்தில் வழங்கப்படும்.
12. 2022-23ம் நிதியாண்டில் வேளாண் பட்டப்படிப்புமுடித்த 200 இளைஞர்கள் அக்ரி கிளினிக், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.ஒருலட்சம் கடனுதவி வழங்கப்படும்.

13. விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்களை லாபகரமாக மாற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
14. இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கப்படும்.
15. ரூ.12 கோடி மதிப்பீட்டில் செம்மரம், தேக்கு, சந்தனம், மாகோகனி போன்ற மதிப்பு மிக்க மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கி மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படும்
இவ்வாறு எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்
