TN Agri Budget 2022 : கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, மேம்பாட்டுத்திட்டம், ஆய்வுக்கூடங்களை நவீனப்படுத்துதல், தானியங்கி எடைத்தளங்கள் அமைத்தல் என கருப்பு விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு தனியாக ஏராளமான திட்டங்கள் தமிழக வேளாண்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, மேம்பாட்டுத்திட்டம், ஆய்வுக்கூடங்களை நவீனப்படுத்துதல், தானியங்கி எடைத்தளங்கள் அமைத்தல் என கருப்பு விவசாயம் மற்றும் விவசாயிகளுக்கு தனியாக ஏராளமான திட்டங்கள் தமிழக வேளாண்பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பேசியதாவது:

ஊக்கத்தொகை
சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்து கரும்பு வழங்கும் கரும்பு விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு வரும் ஆண்டில் சிறப்பு ஊக்கத்தொடகையாக டன் ஒன்றுக்கு ரூ.195 வழங்கப்படும். இந்தத் திட்டத்தால் 1.20 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள்
கரும்பு சாகுபடி மேம்பாடு
கரும்பு விவசாயிகளின் சாகுபடிச் செலவைக் குறைக்கும் வகையில், வல்லுநர் விதைக் கரும்பு, திசுவளர்ப்பு நாற்றுகள், உயிர் உரங்கள் , கரும்பு சோகை உரிக்கும் கருவிகள், நீரில் கரையும் உரங்கள், கரும்பு சோகையைதூளாக்கும் எந்திரம் உள்ளிட்டவை வழங்க ரூ10 கோடி மத்திய அரசின் உதவியுடன் வழங்கப்படும்.

ஆய்வகங்களை நவீனப்படுத்துதல்
சர்க்கரை ஆலைகளில் உள்ள ஆய்வுக்கூடங்களை நவீனப்படுத்தி, ஆய்வுகளை விரைவாகவும், துல்லியமாகவும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக செய்யார், செங்கல்வராயன், தருமபுரி, கள்ளக்குறிச்சி, மதுராந்தகம், பெரம்பலூர், சேலம், திருப்பத்தூர், திருத்தனி , வேலூர் ஆகிய இடங்களில் உள்ள 15 கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ஆய்வுக்கூடங்கள் நவீனப்படுத்தப்படும்.
மீண்டும் செயல்பட நடவடிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள என்பி.கே.ஆர்ஆர். சர்க்கரைஆலை கரும்பு பற்றாக்குறை காரணமாக கடந்த 2016ம் ஆண்டு முதல் இயங்கவில்லை. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தானியங்கி எடைதளம்
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்பினை துல்லியமாக எடைபோடவும், கரும்பிற்கான விலையை விரைந்து வழங்கிடவும் பொதுத்துறை, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் ரூ.1.50 கோடி செலவில் பயன்பாட்டில் இருக்கும் எடைமுறைகள் அனைத்தும் தானியங்கி எடைதளமாக தரம் உயர்த்தப்படும். இதன் மூலம் கரும்பின் எடை விவசாயிகளுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும், களப்பணியாளர்களுக்கும் உடனுக்குடன் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்
இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்
