Asianet News TamilAsianet News Tamil

10, 12 ல் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு.. இன்று முதல் விண்ணப்பம் தொடக்கம்..தெரிந்துக்கொள்ள வேண்டியவை?

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள், இன்று முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும்  பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அதில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

TN 10th 12th Supplementary Exam 2022 Registrations open from Today
Author
Tamilnádu, First Published Jun 27, 2022, 11:05 AM IST

இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் 20ம் தேதி வெளியிடப்பட்டன. பிளஸ் 1க்கு இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித் தேர்வர்களுக்கு, ஜூலை 25 முதல் ஆக.,1 வரையிலும், பிளஸ் 1க்கு ஆக., 2 முதல் 10 வரையிலும், பத்தாம் வகுப்புக்கு ஆக.,2 முதல் 8 வரையிலும் துணைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

மேலும் படிக்க:TN 11th Result 2022:பிளஸ் 1 பொதுத்தேர்வில் 90.01% பேர் தேர்ச்சி..முதலிடத்தை தட்டி தூக்கிய பெரம்பலூர் மாவட்டம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், துணைத் தேர்வு எழுத, இன்று முதல் ஜூலை 4 வரை, ஞாயிறு தவிர மற்ற நாட்களில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க:வெளியானது 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. இந்த முறையும் மாணவர்களை அடித்து தூக்கிய மாணவிகள்..!

மேற்குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்காதவர்கள், ஜூலை 5 முதல் 7 வரை, கூடுதல் கட்டணம் செலுத்தி, தக்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணை பாதுகாப்பாக வைத்திருந்து, அதை வைத்து ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.புதிதாக தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களும், அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 

மேலும் படிக்க:இன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மதிப்பெண்ணை பார்ப்பது எப்படி? இதோ முழு தகவல்..!

ஏற்கனவே, பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கும், பிளஸ் 2வுக்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். தற்போது பிளஸ் 1 எழுதியவர்களுக்கு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி விபரம், இன்று அறிவிக்கப்படும். துணைத் தேர்வு அட்டவணை மற்றும் விதிமுறைகளை,www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios