tk rajendran meeting with edappadi
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் டிஜிபி டி.கே ராஜேந்திரன் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார். அப்போது ஐ.பி.எஸ் இடமாற்றம் குறித்த கோப்புகளில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுவதையடுத்து இன்று இரவு ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்ற அறிவிப்பு வெளியாகலாம்.
தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபியாக யாரை நியமிப்பது என்ற பிரச்சனை ஒரு புறம் ஓடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சிவில் உடையில் வந்த பொறுப்பு டிஜிபி டிகே ராஜேந்திரன் ஐ.பி.எஸ் இடமாற்றம் குறித்து ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார்.
அப்போது, தன்னுடன் கொண்டுவந்திருந்த ஐ.பி.எஸ் கோப்புகளில் கையெழுத்து வாங்கியதாக தெரிகிறது.
இன்று சட்ட ஒழுங்கு டிஜிபியாக டிகே ராஜேந்திரன் பொறுப்பேற்கும் நிலையில் இன்று இரவு பெரிய அளவிலான போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு இன்று இரவு வெளியாகலாம்.
