டிசம்பர் 1 மழை பெய்யும் என்று எதிர்பார்த்தபடியே நேற்று மாலை முதலே கருத்த மேகங்களும் ஆங்காங்கே மழை பெய்யவும் தொடங்கியது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தென் மேற்கு வங்கக்கடலில் சென்னையில் இருந்து 430கிமீ தொலைவில் நாடா புயல் மையம் கொண்டுள்ளது.

புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நாகை மாவட்டத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் சென்றடைந்தனர்.

அதன் தொடர்ச்சியாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், நாகை மாவட்டங்களில் வியாழன், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி, திருவாரூர் மாவட்டத்தில் அதிகாலை முதலே பலமான மழை பெய்து வருகிறது.

திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, மதுக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.


மாமல்ல்புரம், கிழக்கு கடற்கரை சாலை கடற்கரைகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
கடல் சீற்றத்தால் இரண்டு அடி உயரத்திற்கு அலைகள் மேல் எழும்பின.

எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்வதில்லை என அறிவித்துள்ளனர்.

இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது 'நாடா' புயல் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.