பெயர்ந்து வரும் புதிய தார் சாலை! திருப்பத்தூர் அருகே 2 கி.மீ. தூரத்துக்கு மட்டமான ரோடு... வைரல் வீடியோ!

தார் சாலை தரமற்று இருப்பதாக துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் அந்தப் பகுதி மக்கள் முறையிட்டும் அதிகாரிகள் காதில் வாங்கிக் கொள்ளாமல், கடமைக்கு சாலை போட்டு விட்டு சென்றுள்ளனர் என்றும்  அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

Tirupattur people protest against poor road facility; video goes viral sgb

திருப்பத்தூர் அருகே பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு போடப்பட்ட தார் சாலை தரமற்றதாக உள்ளது எனப் புகார் எழுந்துள்ளது. புதிதாகப் போடப்பட்ட சாலை பெயர்ந்து வருவதைக் காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மி குப்பம் ஊராட்சி பகுதியில் மாதா கோயில் பகுதியில் இருந்து புதிய அத்திக்குப்பம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தார் சாலை போட்டதாக தெரிகிறது.

ஆனால் அந்த தார் சாலை தரமற்று இருப்பதாக துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் அந்தப் பகுதி மக்கள் முறையிட்டும் அதிகாரிகள் காதில் வாங்கிக் கொள்ளாமல், கடமைக்கு சாலை போட்டு விட்டு சென்றுள்ளனர் என்றும்  அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

 

சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி வாலிபர் ஒருவர் பொதுமக்கள் உதவியுடன் சாலை தரமற்று இருப்பதை  நிரூபிக்க வெறும் கைகளால் சாலையைப் பெயர்த்து எடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு வாங்க வேண்டும் என்பதற்காக அவசரகதியில் 10 நாட்களுக்கு முன்பு தார் சாலையை போட்டுச் சென்றுள்ளனர்.

இது போன்ற அவல நிலைகளை துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பரிசீலனை செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்களின் நலன் மீது அக்கறை கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

நாளை முதல் டிஸ்கோ! தலைவர் 171 அப்டேட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios