திருநெல்வேலி, தூத்துக்குடி.. கனமழை எதிரொலி.. 25க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து - தென்னக ரயில்வே!
Trains Cancelled : தென் மாவட்டங்களில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் அங்கு பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் 25க்கும் மேற்பட்ட ரயில்களை இன்று ரத்து செய்வதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலமாக வரலாறு காணாத அளவில் தென் மாவட்டங்களில் அதிக அளவில் மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனத்த மழையால் அதிக அளவில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
இன்றும் மலையின் வேகம் குறையாத நிலையில் தென் மாவட்டமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது என்றே கூறலாம். இந்த இக்கட்டான சூழலில் தென்னக ரயில்வே சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில் இன்று டிசம்பர் 19ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி மார்க்கமாக இயக்கப்படவிருக்கும் 25க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
வெள்ளத்தில் சிக்கி தவித்த குழந்தையை பத்திரமாக மீட்ட பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
ஆகவே முன்பதிவு மற்றும் ரயில் பயணங்களை மேற்கொள்ளவுள்ள மக்கள் இந்த அறிவிப்பை பார்த்து தங்கள் பணிகளை கணக்கிடுமாறு தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. கடும் வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை காப்பாற்ற மத்திய அமைச்சர் அமைச்சர் அமித் ஷா அவர்களிடம் கோரிக்கை வைத்து, அதிக அளவிலான படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களை கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு வழங்கிட கோரிக்கை வைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத அளவில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த நான்கு மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரில் வீடுகள் அடித்து செல்லப்படும் காட்சிகளும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் பாதித்த இடங்களில் இருந்து மக்களை மீட்க அரசும், தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற அனைத்து வகையான செயல்களையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.