Asianet News TamilAsianet News Tamil

ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்.. திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு..

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Tirunelveli Mettupalayam special train services extenden till june check details here Rya
Author
First Published May 25, 2024, 8:08 PM IST

நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக ரயில் போக்குவரத்து உள்ளது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்கள் மூலம் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்கேற்ப பண்டிகை நாட்கள், சிறப்பு விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்ப இந்த சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டும் வருகிறது. 

அந்த வகையில் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை மே மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

திருச்சியில் சாலையில் சாகசம் செய்து போக்குவரத்துக்கு இடையூறு செய்த இளைஞர்கள்; கண்டுகொள்ளாத காவல்துறை

தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 07.45 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) ஜூன் 3, 10, 17, 24, 31 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios