Asianet News TamilAsianet News Tamil

திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமா? தேர்தல் ஆணையம் விளக்கம்

பொன்முடி மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வதால் அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தப்படாது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Tirukkoyilur AC has been mentioned in the bypoll list, but no polling will be conducted sgb
Author
First Published Mar 16, 2024, 5:08 PM IST

தமிழ்நாட்டில் விளவக்கோடு மற்றும் திருக்கோவிலூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருக்கோவிலூருக்கு தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தப்படாது என்று மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனையடுத்து, சட்டப்பேரவைச் செயலகம் வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, அவர் மார்ச் 13ஆம் தேதி முதல் மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார்.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியானது. பின்னர், தமிழ்நாட்டில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்திய மாநிலத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு, திருக்கோவிலூரில் தேர்தல் நடத்தப்படாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

பொன்முடி அமைச்சராவது பற்றி தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்: சத்யபிரதா சாஹூ

Tirukkoyilur AC has been mentioned in the bypoll list, but no polling will be conducted sgb

ஆனால், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அறிவிக்கப்பட்டபடி தேர்தல் நடத்தப்படும். அங்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரிணி பாஜவில் சேர்ந்ததை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் விளவங்கோடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி சனிக்கிழமை சென்னை திரும்புகிறார். அவர் வந்தவுடன் பொன்முடி அமைச்சராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலில் வங்கிகளுக்கு முக்கியமான ரோல்! தினமும் தேர்தல் ஆணையத்துக்கு ரிப்போர்ட்!

Follow Us:
Download App:
  • android
  • ios