ரூ.300 கோடி செலவில் திருச்செந்தூர் கோவில் பணிகள்.. முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பு.. அமைச்சர் தகவல்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடி செலவில் செய்யப்படவுள்ள திருப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்குவிழாவில் கலந்துக்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த்தார். அப்போது பேசிய அவர், திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுமார் ரூ.300 கோடி செலவில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, அந்த பணிகளை முதலமைச்சர் அவர்கள் விரைவில் தொடங்கி வைப்பார் என்று கூறினார். கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து திருப்பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் படிக்க:பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. இனி ரேஷன் கடையிலும் சிலிண்டர் வாங்கலாம்..!
திருசெந்தூர் முருகன் கோவிலில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகளுக்கு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் எல்லா விதமான உதவிகளையும் செய்வதற்கு தயாராக உள்ளதாக கூறினார். அதுமட்டுமின்றி ரூ.300 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்படும் திருப்பணிகள், எவ்வளவு காலத்திற்குள் முடியும் உள்ளிடவற்றை தொடங்கி வைக்கும் நாளிலேயே முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மேலும் படிக்க:பயணிகள் அதிர்ச்சி !! சென்னை விமான நிலையத்தில் 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..
அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளும் என்று கூறிய அவர், வெகு விரைவில் பக்தர்கள் தங்கும் விடுதிகளிலே உள்ள அறைகள் அனைத்தும் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்படும் என்றார். கற்குவேல் அய்யனார் திருக்கோயிலில் கோயில் சுற்றுச்சுவர், திருமண மண்டபம், விருந்து மண்டபம் ஆகியவை அமைக்க கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுக்குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் அமைச்சர் உறுதியளித்தார்.