பயணிகள் அதிர்ச்சி !! சென்னை விமான நிலையத்தில் 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..
சென்னை விமானநிலையத்தில் ரூ.59. 70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, 22 ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில், திருவல்லிக்கேணி மற்றும் ஆலந்தூரைச் சேர்ந்த இரண்டு ஆண் பயணிகளிடம் சோதனை நடத்தியதில், ரூ.59.70 லட்சம் மதிப்புள்ள 128.1 கிலோகிராம் தங்கம், ரூ. 4.86 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு… அமைச்சர் எஸ். ரகுபதி திட்டவட்டம்!!
இவர்கள் தங்கத்தை பசை வடிவில் உருக்கி, ஆசனவாயில் மறைத்து கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே போல் மற்றோரு சோதனையில், இலங்கையை சேர்ந்த ஒரு பயணியிடமிருந்து ரூ.23.13 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுக்குறித்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.