Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு… அமைச்சர் எஸ். ரகுபதி திட்டவட்டம்!!

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். 

minister raghupathi says we will appeal against bail of kallakurichi school administrators
Author
First Published Sep 2, 2022, 7:20 PM IST

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ளக்குறிச்சி கனியாமூர் விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீனில் வெளியே வந்த விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து ஜாமீனை ரத்து செய்வதற்கு மேல்முறையீடு செய்யப்படும். தமிழகத்திலேயே சிறை துறை அதிகாரிகள் தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருகின்றனர். குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள் மட்டுமே சிறையில் உள்ளதால் அவர்கள் எதற்கும் துணிந்தவர்களாக உள்ளனர்.

இதையும் படிங்க: அமெரிக்க ஜனாதிபதிக்கே சவால் விட்ட அதிமுக.. அந்த ஒரு வார்த்தை “எடப்பாடியார்” தான் காரணம் !

இவர்கள் சிறையில் இருந்து வெளியே ஆட்களை ஏவி விட்டு பல்வேறு குற்ற செயல்களை செய்வதற்கு தயங்குவதில்லை. மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றி வரும் சிறைத்துறை காவலர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்ததின் அடிப்படையில், சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஓபிஎஸ், எத்தனை முறை கோர்ட்டுக்கு போனாலும் வேலைக்கு ஆகாது.. எடப்பாடியார் வீட்டு வாசலில் மாஸ் காட்டிய SP வேலுமணி

அவர்களோடு ஆலோசனை பெற்று மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் குறித்து மட்டுமே மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறியுள்ளார். போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. போதை பொருட்கள் கடத்தல் குற்றவாளிகள் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios