ஓபிஎஸ், எத்தனை முறை கோர்ட்டுக்கு போனாலும் வேலைக்கு ஆகாது.. எடப்பாடியார் வீட்டு வாசலில் மாஸ் காட்டிய SP வேலுமணி
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செல்கிறால் அதை நாங்களும் சட்டரீதியாக எதிர்கொண்டு வெல்வோம் என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செல்கிறால் அதை நாங்களும் சட்டரீதியாக எதிர்கொண்டு வெல்வோம் என முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதேபோல் ஏற்கனவே தனி நீதிபதி கொடுத்த உத்தரவையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக ஒருசில சுயநல விஷமிகள், திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டனர்- இபிஎஸ் ஆவேசம்
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள இந்த தீர்ப்பை வரவேற்று கொண்டாடி வருகின்றனர். ஆங்காங்கே பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கு தீர்ப்பை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை பசுமை வழி சாலை உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியாரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: அறிவித்து 10 மாசம் ஆச்சு, அதிகாரிகளே இல்லாத SC/STஆணையம்.. ஸ்டாலின் அரசை அலறவிட்டு திருமாவளவன்.
அந்த வகையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், எஸ்.பி வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசி நத்தம் விஸ்வநாதன், ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அமைந்துள்ளது. இது மிகவும் சிறப்பான தீர்ப்பு, இந்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அதை எதிர்கொண்டு நாங்கள் வெற்றி பெறுவோம் என அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, ஓபிஎஸ் எத்தனை முறை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் தரப்பில் இருப்பதால் நீதி வெல்லும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் இந்த ஆட்சியில் முடங்கிக் கிடக்கிறது இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக அமர வைக்க உதவும் என அவர் கூறினார்.