சென்னை மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்.! யாருக்கெல்லாம் தெரியுமா.?

சென்னையில் நாளை நடைபெறும் விஜய் ஆண்டனி இன்னிசை நிகழ்ச்சிக்கு செல்லும் ரசிகர்களுக்கு இலவச மெட்ரோ ரயில் பயணம் வழங்கப்படுகிறது.

Ticket holders for music composer Vijay Antony concert can travel for free on the Chennai Metro train tomorrow KAK

சென்னை மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் மெட்ரோ ரயில் சேவை மிகப்பெரிய பயனுள்ளதாக பொதுமக்களுக்கு உள்ளது. குறிப்பிட்ட இடங்களுக்கு உடனடியாக சென்று சேர மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நாளை ஒரு நாள் குறிப்பிட்ட பயணிகளுக்கு மட்டும் இலவசமாக பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,  சென்னை, AM ஜெயின் கல்லூரி மைதானத்தில், நாளை (28.12.2024) "Vijay Antony 3.0- இன்னிசை கச்சேரி" நடைபெறவுள்ளது. 

Ticket holders for music composer Vijay Antony concert can travel for free on the Chennai Metro train tomorrow KAK

விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சி

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noise and Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது. "Insider" or "District" தளங்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணம் வழங்கப்படும். இந்த முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள மீனம்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும்.

நிகழ்வில் பங்கேற்பவர்கள் தங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகள் உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு, மீனம்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ இரயில் இரவு 12:00 மணிக்கு புறப்படும்.

Ticket holders for music composer Vijay Antony concert can travel for free on the Chennai Metro train tomorrow KAK

மெட்ரோ ரயில் இலவச பயணம்

பயணிகள் கடைசி இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே மீனம்பாக்கம் மெட்ரோ இரயில்நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பச்சை வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios