காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. 

பொதுவாக மார்ச் மாதத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவது கடினம். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அரபிக் கடல் பகுதியில் கன்னியாகுமரி அருகே உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது.

இதன் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதைதொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழு குறைந்தது. இருப்பினும் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வந்தது. 

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.