மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி..! சீறிப்பாயும் காளைகள்- அடக்கும் வீரர்கள்- முதல் முறையாக பெண் வர்ணனையாளர்கள்
மதுரை சத்திரப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும், 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் வழங்கப்பட்டது.
மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி
தமிழக பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எப்போதும் பொதுமக்கள் மத்தியில் அதிக ஆர்வம் இருக்கும். அதனை உறுதிப்படுத்தும் வகையில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்தநிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 70வது பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர்கள் மூர்த்தி, ஐ.பெரியசாமி, மெய்யநாதன்,சிவ சங்கர்,ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்து பார்வையிட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்,1000க்கு மேற்பட்ட காளைகளும் 700மேற்பட்ட மாடுப் பிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர். சிறந்த மாடுக்கும், மாடுபிடி வீரருக்கு கார், இரண்டாவது சிறந்த காளைக்கு, காளையரும் புல்லெட் பைக் வழங்கப்படுகிறது.
கார் மற்றும் புல்லட் பரிசு
இது தவிர தங்கக் காசு, வெள்ளிக் காசு உள்ளிட்டப் பரிசுப் பொருட்கள் வழங்கபட்டு வருகின்றன. முன்னதாக மதுரை சத்திரப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளின் புகைப்படங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டு காளைகளுக்கான அனுமதிச்சீட்டு (QR CODE TOKEN) முறையில் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்யில் போட்டியில் வரலாற்றில் முதன் முறையாக பெண் வர்ணனையாளர்கள் கோவில்பட்டி அன்னபாரதி,(பட்டிமன்ற பேச்சாளர்) செல்வி லாவண்யா (மண்வாசனை YouTube புகழ்)ஆகியோர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இந்த போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் நேரில் பார்த்து வீரர்களை உற்சகம் படுத்தினர்.
இதையும் படியுங்கள்