அடுத்தடுத்து கொலைகள்.! கமிஷனிலும்,கலெக்ஷனிலும் இருக்கும் ஆர்வத்தை சட்டம் ஒழுங்கை காப்பதில் இல்லை-சீறும் இபிஎஸ்

கமிஷனிலும் கலெக்ஷனிலும் இருக்கும் ஆர்வத்தை சட்டம் ஒழுங்கை காப்பதில் முதல்வர் காண்பிக்கவில்லையென குற்றம்சாட்டியுள்ள  எடப்பாடி பழனிசாமி, ரவுடிகள் அச்சமின்றி நடமாடும் இந்த காட்டாட்சியில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

EPS alleges that the DMK regime is only interested in the commission and collection

அடுத்தடுத்து கொலைகள்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் மார்க்கெட் தெரு மற்றும் மசூதி தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கும் சர்புதீன் என்பவர் மனு அளித்துள்ளார். இதனையடுத்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த எதிர் தரப்பினர் சர்புதீனுக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தனர்.  இந்தநிலையில் திருக்கழுகுன்றம் அடுத்த மங்கலம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த சர்புதீனை ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பலால் கொலைவெறி தாக்குதலுடன் அறிவாளால் வெட்டியதில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

EPS alleges that the DMK regime is only interested in the commission and collection

தமிழகத்தில் என்னதான் நடக்கிறது

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விஏஓ வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதை பதைப்பே இன்னும் அடங்கவில்லை ,அதற்குள்ளாக திருக்கழுக்குன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்ததற்காக சர்புதின் வெட்டிப் படுகொலை, சேலம் ஓமலூரில் அரசு ஊழியர்- விஏஓ வினோத்குமார் மீது கொலை முயற்சி என அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள், தமிழகத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்கிற வேதனைக்கேள்வியை எழுப்புகிறது. <

/p>

 

கமிஷனிலும் கலெக்ஷனில் ஆர்வம்

கமிஷனிலும் கலெக்ஷனிலும் இருக்கும் ஆர்வத்தை சட்டம் ஒழுங்கை காப்பதில் இந்த முதல்வர் காண்பிக்க தவறுவதை வன்மையாக கண்டிப்பதுடன், ரவுடிகள் அச்சமின்றி நடமாடும் இந்த காட்டாட்சியில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டிய அவலநிலை உள்ளதை வருத்தத்துடன் பதிவு செய்வதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

'உள்ளேன் அய்யா' என இருப்பைக் காட்டிக்கொள்ளும் ஈபிஎஸ்: செந்தில் பாலாஜி சாடல்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios