ஐபிஎல் அணிகளுக்கு இணையாக அதிமுகவிலும் பல அணிகள்.! கிரிக்கெட் போட்டியே நடத்தலாம் - கலாய்க்கும் உதயநிதி

கிரிக்கெட்டில் ஐ.பி.எல். நடத்துவதுபோல அ.தி.மு.க.வில் ஐ.பி.எல். நடத்தும் அளவுக்கு ஈ.பி.எஸ்.அணி, ஓ.பி.எஸ்.அணி, சசிகலா அணி, டி.டி.வி. தினகரன் அணி, தீபா அணி, அதில் டிரைவர் அணி, கணவர் அணி என்று பல அணிகள் உள்ளதாக உதயநிதி விமர்சித்துள்ளார்.

Udayanidhi has criticized that there are many teams in AIADMK like IPL teams

பிரதமரை சந்தித்து பேசியது என்ன.?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஸ் இளங்கோவன் அபார வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரச்சார வேனில் சென்று பொதுமக்களை சந்தித்தார்.  

அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய உதயநிதி,  தி.மு.க. எப்போதும் மக்களுக்கான கட்சி. நான் அமைச்சராக பொறுப்பு ஏற்றதும், பிரதமரை புதுடெல்லியில் சென்று பார்த்ததாகவும், அப்போது நீட் தேர்வு ரத்து, தமிழகத்தில் சர்வேதேச விளேயாட்டு போட்டி நடத்துவது என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 30 நிமிடங்கள் பேசியதாக கூறினார். 

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்

Udayanidhi has criticized that there are many teams in AIADMK like IPL teams

திமுக வாக்குறுதி நிறைவேற்றம்

ஆனால், எடப்பாடி பழனிசாமி- ஓபிஎஸ் இடையேயான கோஷ்டி பஞ்சாயத்தை சரிசெய்ய பிரதமரை சென்று சந்தித்து பேசியுள்ளதாக விமர்சித்தார். பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூறினார்.ஆனால் நேற்று நடந்த கூட்டத்திற்கு பின் இரண்டு பேரும் கட்டிப்பிடித்துக் கொண்டதாக தெரிவித்தார். தி.மு.க. மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனமாக உள்ளது. 80 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம். விரைவில் 100 சதவீதம் நிறைவேற்றி விடுவோம். மக்களை தேடி மருத்துவம், மகளிருக்கு கட்டணம் இல்லாமல் பயணம் என பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

Udayanidhi has criticized that there are many teams in AIADMK like IPL teams

பிரதமர் வேட்பாளர் யார்.?

பிரதமர் வேட்பாளர் யார் என்பதை இந்தியாவே எதிர்பார்த்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என அனைத்து மாநிலங்களுக்கும் எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து அ.தி.மு.க.வை அப்புறப்படுத்தியதை போல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டவர், அற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

இதையும் படியுங்கள்

அடுத்தடுத்து கொலைகள்.! கமிஷனிலும்,கலெக்ஷனிலும் இருக்கும் ஆர்வத்தை சட்டம் ஒழுங்கை காப்பதில் இல்லை-சீறும் இபிஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios