ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை பெற்று 1 மாத பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை ரத்து செய்ய கோரி தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் அய்யலுசாமி செல்ஃபோன் டவரில் ஏறி கண்ணில் கருப்புத்துணி கட்டி தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். 

ராஜீவ்காந்த் கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். 26 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு இன்று பரோலில் வெளியுலகத்தை காண்கிறார். 

பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்து கொள்ள பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகே இந்த பரோல் கிடைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒரு மாதமும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள கூடாது, வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது, போலீசாரிடம் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலைலையில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை ரத்து செய்ய கோரி தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் அய்யலுசாமி செல்ஃபோன் டவரில் ஏறி கண்ணில கருப்புத்துணி கட்டி தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.