தமிழகத்துடன் அறிவிக்கப்பட்ட மற்ற 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமானப்பணிகள் தற்போது  துவங்கப்பட்டு உள்ளது. ஆனால் அறிவிக்கப்பட்ட இடத்தில் தமிழகத்தில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கால தாமதம் ஆகிறது. தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் என்பதில் ஏற்பட்ட குழப்பமே தாமதத்திற்கு காரணம் என ஆவணங்களில் தகவல் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
   
அதாவது முதலில் தஞ்சாவூரில் கட்ட முடிவு செய்யப்பட்ட பிறகு, மதுரையில் எய்ம்ஸ் என மாற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது மேலும், தமிழக எய்ம்ஸ்-காக ரூ.1200 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதகவும், நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்றவுடன் இந்த மாத இறுதிக்குள் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி என்றும் காலதாமதம் ஏற்பட்டாலும் எய்ம்ஸ் நிச்சயம் அமையும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.தமிழகத்தில் பன்றி காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பு உள்ளது, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை 

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் பின்னடைவு ஒன்றும் இல்லை, எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அரசு விதித்த 5 நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.