thiruvannamalai theebam programme plan scheduled
திருவண்ணாமலை தீபத் திருவிழா
ஆண்டுதோறும் அனைத்து கோவில்களிலும் விளக்கேற்றி கடவுளின் தரிசனத்தை பெறுவதில் மக்கள் அதிக ஆர்வமாகவும், அதிக பக்தியுடன் இருப்பர்.
அப்படிப்பட்ட பக்தி மாதம் இன்று தொடங்கியுள்ளது ...அதாங்க கார்த்திகை மாதம் இன்று தொடங்கி உள்ளது
கார்திகை மாதம் என்றாலே கார்த்திகை தீபம் எப்போது வரும் என்று தான் நினைக்க தோன்றும்...கார்த்திகை தீபம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தீபம் தான் அல்லவ...

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில், ஒன்று கூடும்நாள் கார்த்திகை தீபம்தான்....

கார்த்திகை மாதம் தொடங்கிய இந்நாள் முதல் இம்மாதம் வரை நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்
திருவண்ணாமலை தீபத் திருவிழா :2017 ஆம் ஆண்டு தீப திருவிழா நிகழ்ச்சிநிரல்
20/11/2017 -அன்று துர்க்காம்பாள்.
21/11/17 - பிடாரி அம்மன் உற்சவம்
22/11/17 -விநாயகர் புற்றுமண் எடுத்து வருதல்
23/11/17 -முதல் நாள் கொடி ஏற்றம்
காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா
இரவு அதிகாரநந்தி வெள்ளி
அன்னபட்க்ஷ2ஆம் நாள்
24/11/17
காலையில் சூரிய பிரபையில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திரவிமானம்
25/11/2017
காலை3ஆம் நாள் பூத வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனத்தில் வீதியுலா
26/11/17
4 - ஆம் காலை தங்க நாக வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் காமதேனு கற்பக விருட்சம் வாகனத்தில் வீதியுலா
27/11/17
5ஆம்நாள் காலையில் கண்ணாடி ரிஷபம் வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் கைலாய காட்சி
28/11/2017
6ஆம் நாள் காலை 63 நாயன்மார்கள் மற்றும் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி தேர்
29/11/17
7ஆம் காலையில் பஞ்சமூர்த்திகள் மஹா ரதம்
30/11/2017
8ஆம் நாள் காலை குதிரை வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா அன்று மாலை பிடஷாடணர் உற்சவம் இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் வீதியுலா
01/12/2017
9ஆம் நாள் காலை சந்திரசேகர் புருஷா மிருகம் வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம் மற்றும் காம தேனு வாகனத்தில் வீதியுலா
2/12/2017
10ஆம் நாள் அதிகாலை 4.00 மணி அளவில் பரணி தீபமும்
மற்றும் மாலை 6.00 அளவில் மஹா தீபம் அண்ணாமலையாருக்கு மலை மேல் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
