thiruvannamalai online ticket sale in websitr
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு ஆன்-லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யும் திட்டத்தை முதன் முறையாக இந்த ஆண்டு அறிமுகம் செய்யப் பட்டு உள்ளது
இந்து சமய அறநிலையத்துறை சொல்வது என்ன?
ஆண்டுதோறும் டிசம்பர்2-ம் தேதி காலை பரணி தீபம், மாலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.வெகு விமரிசையாக நடைபெறும் இந்த தீபத்தை காண உலக நாடுகளிலிருந்து பல்வேறு பக்தர்கள் வருகை தருவார்கள்
தீபத்தை பார்க்க ஒரே நாளில் லட்ச கணக்கில் பக்தர்கள வருகை புரிவதால் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டு உள்ளது.மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தற்போது ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
டிக்கெட் விவரம்
ஆன்லைனில் மூலம் டிக்கெட் முன் பதிவு செய்வதற்குஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது
www.tntemple.org என்ற இணையதளம் சென்று நாளை காலை 6 மணிமுதல் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்
நபருக்கு ரூ.500 கட்டணம்
பரணி தீப தரிசனத்தை காண நபர் ஒன்றுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
பரணி மற்றும் மகா தீபத்தை காண 500 பேர் அனுமதிக்கப்பட உள்ளது.ஆனால் மகா தீபத்திற்கு 100 பேர் அனுமதிக்கப்படுவர்.டிக்கெட் விலை ரூ.600
கடந்த 23-ம் தேதி துவங்கிய கார்த்திகை தீப திருவிழாவின் அதிமுக்கிய நிகழ்வான பரணி தீபம் வரும் 2-ம் தேதி காலை நடைபெற உள்ளதால்,பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளலாம்
