Thirumavalavan condemned the petition of the Liberation Tigers of Tamil Eelam

அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் தரிசித்து வருகின்றனர். ஜூன் 29-ம் தேதி தொடங்கிய இந்த அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதியுடன் முடி வடைகிறது.
இதனிடையே ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானியின் முதலாண்டு நினைவு தினம் கடந்த 8 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
இதையடுத்து அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக அமர்நாத் யாத்திரை செல்வதற்கு அன்று மட்டும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் யாத்திரை தொடங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டம் அருகே பஸ்ஸில் பக்தர்கள் பயணித்துக் கொண்டு இருந்த ஆயுதங்கள் தாங்கிய தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் 7 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.