தமிழகத்தில் நடக்கும் கொலைகளுக்கு ஒரு எண்டே இல்லையா? திமுகவை இறங்கி அடிக்கும் திலகபாமா!
ஒரே நாளில் மூன்று கொலைகள் இன்று என ஆரம்பிக்கும் போதே அடுத்த கொலை இன்னொரு இடத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது நாளை மழை வருமா வராதா என்பதனை தொலைக்காட்சியில் கண்டு விட்டு நகர்வது போலவே நாமும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.
தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் கொலைகளுக்கு பின்னால் உள்ள அரசியல் காரணங்கள் மறைக்கப்பட்டு, சாதாரண காரணங்கள் என பொய் பிம்பம் காட்டப்படுவதாக திலகபாமா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூர் அவருடைய புதிய வீடு கட்டி வரும் வேணுகோபால் சாமி தெருவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 5 வழக்கறிஞர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழிவாங்கும் நோக்கத்துடன் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் அரசியல் காரணங்கள் இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்து வரும் கொலைகள் எதிர்கால தலைமுறையினருக்கான அச்சுறுத்தல் என பாமக பொருளாளர் திலகபாமா எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில்: ஒரே நாளில் மூன்று கொலைகள் இன்று என ஆரம்பிக்கும் போதே அடுத்த கொலை இன்னொரு இடத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது நாளை மழை வருமா வராதா என்பதனை தொலைக்காட்சியில் கண்டு விட்டு நகர்வது போலவே நாமும் கடந்து சென்று கொண்டிருக்கிறோம் அரசியல் கொலைகள் சாதாரண கொலைகள் அல்ல திட்டமிட்டு அடுத்த தலைமுறையை கைப்பற்றுவதற்காக தீட்டப்படுகிற சதி வேலைகள் அதற்கு தடங்கல்களா இருக்க போகிறவர்களை கொலை செய்து காலி செய்கிறார்கள்.
தொலைக்காட்சியை காண்பவர்களுக்கு செய்தி, தொலைக்காட்சியை நடத்துபவர்களுக்கு டிஆர்பி ரேட்டிங் அரசியல் இயக்கங்களுக்கோ நாங்களும் இருக்கிறோம் என்பதற்கான இயக்கமாய் எதிர்ப்பு மாறிக் கொண்டிருக்கிற சூழலில் கல்வியும் வேலை வாய்ப்பும எல்லோருக்கும் அவரவருக்கு தேவையான அளவிற்கு கிடைத்தால் அதிகார மையங்களுக்கான போட்டிகள் குறைந்து அவரவர் வாழ்வியலுக்கான வழிவகைகள் பூக்க ஆரம்பிக்கும் எப்போது அதை செய்யப் போகிறோம் அதைத்தான் தொடர்ந்து மருத்துவர் ஐயா அவர்கள் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார் அதைத்தான் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி இயக்கமாய் மாட்டிக் கொண்டிருக்கிறது.
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி கொண்டுவரும் மாற்றம் பலரின் போலித்தனங்களை காலி செய்யும் என்பதனால் எல்லாம் தலை மாற்றி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது வாசிப்பதற்கு விலை பேசப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ரத்தமும் சதையுமாக நிகழ்ந்து முடிந்து இருக்கிற கொலைகள் எதிர்கால வாழ்வியலின் மேல் அச்சுறுத்தலை தந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் வாக்குச்சாவடிகளில் பணமும் தண்ணியும் பெற்றுக் கொண்டு வாக்களித்துக் கொண்டே இருக்கிறோம். இந்த அரசியல் கொலைகளுக்கு முன்னால் பெரும் ஜனநாயக படுகொலை நடந்து முடிந்திருக்கிறது ஆதன் எதிர் விளைவுகளை தினம் தினம் கண்டனம் தெரிவிக்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம் என்பதே வருத்தமான ஒன்றாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.