There is no need to subjection for ADMK by thambidurai

மாட்டிறைச்சி விவகாரத்தில் மக்களுக்கு பிடிக்காததை செய்யமாட்டோம் எனவும், அதிமுக அரசு யாருக்கும் பயந்து போக வேண்டிய அவசியம் இல்லை எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்த கூடாது என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசின் சட்டத்தை நிறைவேற்ற முடியாது என தெரிவித்துள்ளனர்.

இதற்கு தமிழக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் போராட்டங்களையும் அறிவித்துள்ளனர்.

ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என தெரிவித்திருந்தார்.

இதனிடையே மாட்டிறைச்சி விவாகரத்தில் தமிழக அரசு யாருக்கும் பயப்படாது எனவும், ஜல்லிக்கட்டை போன்று இந்த விவகாரத்திலும் தமிழக அரசு திறமையாக கையாளும் எனவும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருந்தார்.

இந்நிலையில், மாட்டிறைச்சி விவகாரத்தில் மக்களுக்கு பிடிக்காததை செய்யமாட்டோம் எனவும், அதிமுக அரசு யாருக்கும் பயந்து போக வேண்டிய அவசியம் இல்லை எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

மேலும், அ.தி.மு.க.வுக்கென்று தனித்துவம் உண்டு எனவும், இந்த அரசு யாருக்கும் கைப்பாவையாக செயல்படவில்லை எனவும் தி.மு.க.வுக்கு வேண்டுமென்றால் அந்த பழக்கம் இருக்கலாம் எனவும் குறிபிட்டுள்ளார்.