Asianet News TamilAsianet News Tamil

வீடுகளுக்கு எந்தவித மின் கட்டண உயர்வும் இல்லை - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு எவ்வித கட்டண உயர்வு கிடையாது என்று அத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

there is no charges increase in tneb for residential says minister senthil balaji
Author
First Published Jun 12, 2023, 12:23 PM IST

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.3.7கோடி மதிப்பீட்டில் சாலை பணிகளை  தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவங்கி வைத்தார். இதை தொடர்ந்து, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த மார்க்கெட்டில் பணிகளை துவக்கி வைத்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், கோவை மாநகராட்சியின்  பழுதடைந்த சாலைகள் புதிய தார் சாலைகள் அமைக்க 200 கோடி ரூபாய் சிறப்பு நிதிகள் வழங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு நடைமுறையில் வந்துள்ளன. இன்று புதிதாக ஏறத்தாழ 173 கிலோ மீட்டர் அளவிலான சாலை அமைக்கக்கூடிய பணிகளில் 71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய் சிறப்பு நிதியும், முதல்வர் அறிவிப்பில் மேலும் 60 கோடி என,  ஏறத்தாழ 260 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்து சாலை பணிகள் அமைக்கப்பட்டு கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார். 578 கிலோமீட்டரில்  சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. 

கோவையில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து 5 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம்

மேலும், அண்ணா மற்றும் எம்ஜிஆர் என இரண்டு மார்க்கெட் பகுதிகளிலும்,  பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 1157 ரோடுகள், 578 கிலோமீட்டர் 250 கோடி மாநகராட்சிகள் மட்டும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைதுறையை  பொருத்தவரைக்கும் 36 கிலோ மீட்டர் சாலை, 140 கோடி ரூபாய் இந்தப் பணிகள் இரண்டு மாதத்திற்கு முடிக்கப்படும். 

மின்சார கட்டணம் குறித்த கேள்விக்கு மின்வாரியம் சார்பில் மிகத் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு எந்தவித மின் கட்டணம் உயர்வும் இல்லை,  ஏற்கனவே நடைமுறையில் உள்ள மின் திட்டங்கள், விசைத்தறி, கைத்தறி வழங்கக்கூடிய இலவச மின்சாரங்கள் தொடர்ந்து வழங்கப்படும் என  உறுதியும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய அளவிலான மாற்றங்கள் என்பது ஒன்றிய அரசு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு வலியுறுத்தி ஆண்டுக்கு ஏற்படுகின்ற செலவின் அடிப்படையில் இந்த கட்டண மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. 

அமித்ஷா வரும்பொழுது மின் வெட்டு குறித்த கேள்விக்கு யார் குற்றச்சாட்டு சொன்னாலும் அப்படியே கேட்பார்கள்,  நீங்கள் பத்திரிக்கையாளர்  தானே, பத்திரிகையாளர் மத்தியில்  ஒரு விஷயத்தை, ஒரு குற்றச்சாட்டை  கூறினால்,  அரசியலுக்காக, எதையோ  மனதில் வைத்துக்கொண்டு கூறும் குற்றச்சாட்டு சரியா? தவறா? என  ஆராய்ந்து பார்த்து செய்தி வெளியிட வேண்டும்.  மின் வெட்டு  பாதிப்பு உள்ளதா? சென்னையில் நடைபெற்றது தற்செயலானது.   

ஆயிரம் கோடி கனிமவள கடத்தலில் எனக்கு தொடர்பா? திமுக எம்எல்ஏ சவால்

துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாரை உடனடியாக 40 நிமிஷத்தில் சரி செய்யப்பட்டு சீரான மின்விநியோகம் தரப்பட்டது. பொதுவாகவே சென்னையில்,  கோவையில்  சொல்லக்கூடிய கருத்து, குற்றச்சாட்டு சரியாக? தவறா? என ஆராய்ந்து பார்க்க வேண்டும். அன்புமணி,  2 லட்சம் கோடி டாஸ்மாக்கில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஒரு வருடத்தில் விற்பனை 45 ஆயிரம் கோடி தான்,  இரண்டு வருஷத்தில் 83 ஆயிரம் கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது. அப்படி இருக்கும் போது, இரண்டு லட்சம் கோடி இழப்பீடு எப்படி ஏற்பட்டது. அதையும் செய்திகளாக போடுகிறீர்கள்,  நீங்கள் அவர்களிடம் கேள்வி கேட்பதில்லை. புதிய தமிழகம் கிருஷ்ணசாமி நாடாளுமன்ற தேர்தல் வருவதை ஒட்டி எதைஎதையோ கூறி வருகிறார்.

மழைக்காலங்களில் மாநகராட்சியை பொறுத்தவரை,  மேயர் தலைமையில், ஆணையர் அதிகாரிகள் பல்வேறு காலகட்டங்களில் எந்தெந்த சிறப்பு பணிகள் செய்ய வேண்டும் என பட்டியலிட்டு செய்து வருகிறார்கள். உடனடியாக சிறப்பு கவனம் கொண்டு மேம்படுத்தப்படும்,  முன்பு இருந்த அளவுக்கு மழை பாதிப்பு இருக்காது.

வருமான வரித்துறை சோதனை குறித்த கேள்விக்கு,  எங்க வீட்டுக்கு சோதனை செய்ய வரவில்லை. எங்களது உறவினர் வீட்டுக்கு வந்தார்கள். வருமானவரித்துறை சோதனையை பொறுத்த வரை,   எந்தெந்த இடங்களுக்கு சென்றார்களோ, அங்கெல்லாம் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம். என்ன ஆவணம் கேட்டார்களோ தாக்கல் செய்துள்ளோம். கூடுதல் ஆவணங்கள் கேட்டாலும் நாங்கள் தர தயாராக இருக்கிறோம். சோதனையை பொறுத்தவரை மிகத் தெளிவாக முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளோம்.

கோவை  அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் மாற்று இடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கேள்விக்கு, அவர்கள் என்ன கேட்டார்கள் என்பதை அதிகாரியிடம் விளக்கம் கேட்டு என்னென்ன தேவைகள் கேட்டு சரி செய்யப்படும் வியாபாரிகளின் கோரிக்கை திராவிட மாடல் அரசு கணிவோடு பரிசளித்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios