சேகர்ரெட்டி, சீனிவாசலு, பிரோம்குமார் ஆகியோரது நீதிமன்றக் காவல் மே 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சட்டவிரோதமாக 34 கோடிபுதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்த வழக்கில் ஓ.பன்னீர் செல்வதற்கு நெருக்கமாக இருந்த சேகர் ரெட்டி கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சேகர் ரெட்டியின் சகோதரரான சீனிவேலு மற்றும் பிரேம் குமார் ஆகியோரும் கைதாகினர். 

கைது செய்யப்பட்டு 80 நாட்களை கடந்தும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் வெளியே வந்த மூன்றே தினங்களில் சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டார்.

இந்தச் சூழலில் ஜாமீனில் விடுவிக்கும்படி சேகர்ரெட்டி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது. 

இதற்கிடையே சேகர் ரெட்டியின் நீதிமன்றக் காவலை மே 10 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று பேரிடமும் 5 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.