Asianet News TamilAsianet News Tamil

Coimbatore Dating Cafe: பெண்களுடன் coffee குடித்துக்கொண்டே நடனம் ஆடும் Cafe.! கோவையில் தொடங்கப்பட்டதா?

 பெண்களுடன் நடனம் ஆடிக்கொண்டே காபி குடிக்கும் வகையில் கோவையில் dating cafe திறக்கப்படுவதாக சமூகவலைதளத்தில் விளம்பரம் பரவிய நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

There is a lot of buzz in Coimbatore due to an advertisement of a dating cafe where women drink coffee and dance KAK
Author
First Published Jan 10, 2024, 10:02 AM IST | Last Updated Jan 10, 2024, 10:51 AM IST

டான்ஸ் ஆடிக்கொண்டே காபி

சமூக வளைதளத்தின் வளர்ச்சியின் காரணமாக நவீன காலத்திற்கு ஏற்ப இளைஞர்களும் மாறிக்கொண்டே வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் புதிய, புதிய ஐடியாக்களை தொழில்களில் புகுத்தி வருகின்றனர். அந்த வகையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் dating cafe திறக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் போஸ்டர் மற்றும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் ஆகியவை அதிக அளவில் செயல்படுகின்றன இங்கு வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் இளைஞர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியை குறிவைத்து பல்வேறு பப்களும், பார்களும் இயங்கி வருகிறது.  

There is a lot of buzz in Coimbatore due to an advertisement of a dating cafe where women drink coffee and dance KAK

சமூகவலைதளத்தில் வெளியான விளம்பரம்

இந்தநிலையில் மும்பை,டெல்லி போன்ற பெருநகரகங்களில் இந்த dating cafeசெயல்படுகிறது. இந்த கடையில் காபி குடித்துக்கொண்டே பெண்களுடன் நடனம் ஆடலாம். இது  அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இதே போன்று ஒரு dating cafe கோவை சரவணம் பட்டியில் தொடங்க இருப்பதாக சமூகவலைதளத்தில் செய்தி பரவியது. இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக சீரழிவதாக புகார் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த விளம்பரத்தை பார்த்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை செய்ததில் அந்த நிறுவனம் இது போன்ற விளம்பரத்தை வெளியிடவில்லை என்றும் , வேறு ஏதோ பெண் தான் சமூகவலைதளத்தில் போஸ்ட்டை பகிர்ந்தாக தெரியவந்தது. 

There is a lot of buzz in Coimbatore due to an advertisement of a dating cafe where women drink coffee and dance KAK

களத்தில் இறங்கிய போலீஸ்

இதுதொடர்பாக  சமூகவலைதளங்களில் யார் இது போன்ற தகவலை பரப்பினார்கள் என்று விசாரணை மேற்கொண்டு வருவதாக மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் இது போன்ற எந்த ஒரு cafeவும்  கோவையில் தொடங்கப்படவில்லை என்றும் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதாக கூறி காவல்நிலையத்திற்கு சென்று எழுத்து பூர்வமாக எழுத்தி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

கோலிவுட்டின் அடுத்த லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios