தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் 760 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது குறித்த விவரங்களை விரிவாக காண்போம்.

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத இடங்கள் என மொத்தம் 760 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு கல்வித்தகுதி என்ன? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பது குறித்து விரிவாக காண்போம். பொறியியல்/ தொழில்நுட்ப துறையை பொறுத்தவரை சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 460 காலிபணியிடங்கள் உள்ளன. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் 28 இடங்களும், கட்டிடக்கலை பிரிவில் 12 பணியிடங்கள் என மொத்தம் 500 பணியிடங்கள் உள்ளன.

டெக்னீஷியன் (டிப்ளமோ) துறையை பொறுத்தவரை சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 150 இடங்களும், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் 5 இடங்களும், கட்டிடக்கலை பிரிவில் 5 இடங்களும் என மொத்தம் 160 பணியிடங்கள் உள்ளன. பொறியியல் அல்லாத பட்டப்படிப்பு துறையை பொறுத்தவரை 100 இடங்கள் உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு காலம் பயிற்சி அளிக்கப்படும்.

இதில் பொறியியல்/ தொழில்நுட்ப பட்டப்படிப்பு துறையில் தகுதியானவர்களுக்கு பயிற்சி காலத்தில் ரூ.9,000 உதவித்தொகை வழங்கப்படும். டிப்ளமோ துறையில் தகுதியுள்ளவர்களுக்கு பயிற்சி காலத்தில் ரூ. 8,000மும், பொறியியல் அல்லாத பட்டப்படிப்பு துறையில் தகுதியுள்ளவர்களுக்கு பயிற்சி காலத்தில் ரூ.9,000மும் வழங்கப்படும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்பு/டிப்ளமோவில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பின்பு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். தொழிற்பயிற்சிக்கான சட்டவிதிகளின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2024 ஆகும். சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள் ஜனவரி 21 முதல் 24ம் தேதி வரை ஆகும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.