சிவகங்கை

சிவகங்கையில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடையின் சுவற்றில் ஓட்டைப்போட்டு மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கடையில் இருந்து பெட்டி பெட்டியாக சாராய புட்டிகள் திருடப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2 இலட்சமாகும்.

சாராயக் கடையில் திருட்டு நடந்துள்ளது என்பதை அறிந்த அக்கடையின் மேற்பார்வையாளர், கடை பொறுப்பாளர் மற்றும் மேலாளர் கடைக்கு வந்து சோதனை நடத்தினர். அதில், ரூ.2 இலட்சம் மதிப்பிலான சாராய புட்டிகள் திருட்டு போயுள்ளதை கண்டுபிடித்தனர்.

 

இதுகுறித்து ராஜேஷ், சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப் பதிந்த காவலாளர்கள் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மார்ச் மாதம் இதே சாராயக் கடையில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், காலாவதியான சாராய புட்டிகளை திருடிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.