மனிதன் மனிதனாக இருக்கும் வரை உலகம் அழியாது என்றும், அதனை மீறினால் தீ, பூகம்பம், வெள்ளம் என உலகம் அழியும் என்று சதுரகிரி சாமியார் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை சதுரகிரி மலையில் உள்ள சாமியார்கள், அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகின்றனர். அப்படி ஆசி வழங்கும் சாமியார் ஒருவரிடம் பிரபல வெப்சைட் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது பேசிய அந்த சாமியார், தமிழகத்தில் உள்ள ஆலயம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கோயிலுக்கு நுழையும்போது மனத்தையும், உடலையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இந்து சமய சைவத்தைப் பின்பற்ற வேண்டும். ஆனால், ஆலயம் சுற்றி தவறான செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக பெண்களை மயக்குதல், மது போதைக்கு அடிமையாகுதல் நடக்கின்றன. ஆலயத்துக்கு மன நிமித்தமாகவும், இறைவனைத் தேடியும்தான் கோயிலுக்கு வர வேண்டும். ஆனால் மனிதன் அதிக ஆசையுடன் வருகிறான். தெய்வத்துக்கு அப்பாற்பட்ட சக்தியைப் பெற நினைத்தால், மனிதன் அழிவை நோக்கித்தான் செல்வான். 

மனிதன் மனிதனாக இருக்கும் வரை உலகம் அழியாது. ஆனால், அதனை மீறினால், உலகம் தீ, பூகம்பம், வெள்ளம் என்ற மூன்று விதத்தில் அழியும் என்று சொல்லி இருக்கிறார்கள். 

அரசியல்வாதிகள் கோயில் சொத்துக்களைக் கொள்ளையடிக்கின்றனர். மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் ஜீயர் மது அருந்திவிட்டு சாமிக்கு தீப ஆராதனை காட்டுகிறார்கள். கோயிலுக்குள் மது பாட்டில்கள் கிடக்கிறது என்று கூறினார்.