விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவின் இரு அணிகளும் இணையும்” என்று தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது சட்டப்படி தவறு என்றும், இதுகுறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறிய கருத்து குறித்து கேட்டதற்கு, “ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது சட்டப்படி தவறு என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் ஒன்றும் சட்டம் படித்த வக்கீல் அல்ல.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் மேலும் ஒரு படி முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நீங்கள் நினைத்தபடி அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இந்த பேட்டியின்போது ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரன், மற்றும் மனோஜ்பாண்டியன், திருமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.