காஞ்சிபுரம்

உத்திரமேரூரில் பற்பசைக்கு பதிலாக தவறுதலாக எலி மருந்தில் பல் துலக்கிய 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த காக்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு ராகினி (5) என்ற மகள் இருந்தாள். இவள், காக்கநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் 1–ஆம் வகுப்பு படித்து வந்தாள்

நிகழ்வின்று, காலை சிறுமி ராகினி பல் துலக்க சென்றபோது அப்போது பற்பசைக்கு பதிலாக தவறுதலாக அருகில் இருந்த எலி மருந்தை எடுத்து பல் துலக்கி விட்டாள். இதனால் ராகினியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மயக்கம் ஏற்பட்டது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தந்தை உடனே ராகினியை மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்கைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி ராகினி, பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.