Tiffin Box Bomb : அதிகாலையில் பயங்கரம்... டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு- மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
மதுரையில் சாலையில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது டிபன் பாக்ஸ் குண்டு வாசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் டிபன் பாக்ஸ் குண்டு
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லாமல் பரபரப்பாக முடிவடைந்துள்ளது. இதனால் போலீசார் சற்று நிம்மதி அடைந்திருந்த நிலையில், காவல்துறையினருக்கு மட்டுமில்லாமல் பொதுமக்களுக்கும் ஷாக் கொடுக்கும் சம்பவம் மதுரையில் நடைபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில் நின்று கொண்டிருந்த நவீன் என்பவர்கள் மீது மர்ம நபர்கள் இன்று காலை டிபன் பாக்ஸ் குண்டை வீசியுள்ளனர். இதில் நவீன் பலத்த காயம் அடைந்துள்ளார். மேலும் அருகில் நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
2 பேர் காயம் போலீசார் விசாரணை
இதனையடுத்து காயம் அடைந்தவர்களை மீட்ட அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு தொடர்பாக போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நவீனுக்கும் மர்ம நபர்களுக்கும் இடையே முன் விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருந்த போதும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் வந்த காங்கிரஸ் நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்; போலீஸ் வலைவீச்சு