பள்ளிக்கல்வித்துறைக்கு இயக்குனர் நியமனம்..! அதிகாரிகளை மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளி கல்வி இயக்குனர் பணியிடம் மீண்டும் நிரப்பப்பட்டுள்ளது. தற்போது தொடக்கக்கல்வித்துறை இயக்குனராக இருக்கும் அறிவொளி, பள்ளி கல்வி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.  தொடக்கக் கல்வி இயக்குனராக கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

The Tamil Nadu government has appointed the director of the school education department

இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

திமுக ஆட்சிக்கு வந்ததும் பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அந்த பணியிடத்தில் ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் கடுமை எதிர்ப்பு தெரிவித்து வந்தன. பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் துறையின் தலைமை பொறுப்பை மீண்டும் இயக்குனர் வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.  மேலும் கமிஷனரை மாற்ற வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கையையும் அளிக்கப்பட்டு இருந்தது. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறையில் உள்ள செயல்பாடுகளை அடிமட்டத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடியாது. இதற்கு பள்ளி கல்வி துறையில் ஆரம்பத்தில் இருந்து பணியாற்றி அதிகாரிகளுக்கு தான் இயக்கும் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

The Tamil Nadu government has appointed the director of the school education department

இயக்குனராக அறிவொளி நியமனம்

இந்த நிலையில் அண்மையில் வெளியான ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றப்பட்ட பட்டியலில்  நந்தகுமாரும் இடம் பெற்றிருந்தார். அவர் மனித வள மேம்பாட்டு துறை செயலாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டடார்.  இதனையடுத்து பள்ளி கல்வி ஆணையர் பணியிடத்தில் வேறு எவரும் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடத்தை நிரப்ப அரசு முடிவு செய்தது. அந்த இடத்தில் அறிவொளி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது தொடக்க கல்வித்துறை இயக்குனராக அறிவொளி இருந்து வருகிறார். மேலும் பாடநூல் கழகத்தில் உறுப்பினர் செயலராக இருக்கும் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் கூடுதல் இயக்குனராக இருக்கும் ராமேஸ்வர முருகன், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

The Tamil Nadu government has appointed the director of the school education department

கல்வி துறை அதிகாரிகள் மாற்றம்

இந்த பணியிடத்தில் உள்ள பழனிசாமி, முறைசாரா கல்வி இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முறைசாரா கல்வி இயக்குனராக இருக்கும் குப்புசாமி, பாடநூல் கழக உறுப்பினர் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐந்து இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வந்த இணை இயக்குனர்கள் நரேஷ், ராமசாமி உள்ளிட்ட ஏழு இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடத்தை, மீண்டும் தமிழக அரசு நிரப்பி இருப்பது ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

திமுக ஆட்சி வந்தும் பயன் இல்லை.. பள்ளிக்கல்வித்துறை என்ன செய்கிறது? அதிரடி காட்டிய ராமதாஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios