போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு...! ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தைக்கு தேதி அறிவித்த தமிழக அரசு
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் உள்ள நிலையில், மீண்டும் நாளை பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 8 போக்குவரத்து கழகங்களில், சுமார் 1.20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான அகவிலைப் படி உயர்வு, ஓய்வு காலப் பயன்கள், மருத்துவக் காப்பீடு போன்ற கோரிக்கைகள் குறித்து பலமுறை தமிழக அரசோடு போக்குவரத்து துறை ஊழியர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சு வார்த்தையில் முடிவு காணப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையிலும் தொடர் இழுபறி ஏற்பட்டது.
இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம், காத்திருங்கள்... ஸ்டாலின் அறிவிப்பால் அலறும் சென்னை!!!
அதிமுக கண்டனம்
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், கடந்த ஆட்சியில் தொழிலாளர் ஊதிய விகிதம் ஜூனியர்,சீனியர் வேறுபாடின்றி மாற்றி அமைக்கப்பட்டதை களைய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று கொண்டுள்ளோம். ஆனால் இந்த புதிய திட்டத்தை எந்த ஆண்டு முதல் அமல்படுத்துவது என்று முடிவு செய்யவில்லை. அதை நிதித்துறையிடம் கலந்தாலோசித்து முடிவு செய்யவேண்டும் என கூறினார் . மேலும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை 4 ஆண்டுகாலமாக உயர்த்தக் கூடாது என்ற தொழிற்சங்கத்தினர் கோரிக்கை தொடர்பாகவும் நிதித் துறை ஒப்புதல் பெற வேண்டி இருப்பதால் இன்னைய பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை என கூறினார். மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான தேதி மற்றொரு நாளில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதற்க்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது, இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தேதியை கூட அமைச்சர் குறிப்பிடாதது தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதன் மூலம் தொழிலாளர்களிடைய மன உளைச்சலை ஏற்படுத்தி, அவர்களை தங்கள் வழிக்குக் கொண்டு வரலாம் என்று அரசு நினைக்கிறதோ என்ற எண்ணம் தொழிலாளர்கள் மத்தியில் நிலவுவதாக தெரிவித்து இருந்தார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்...! ஓபிஎஸ்- இபிஎஸ் அணி எப்படி இருந்தது தெரியுமா- மைத்ரேயன் தகவல்
நாளை மீண்டும் பேச்சுவார்த்தை
மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில், அனைத்துத் தொழிற்சங்கங்களையும் தமிழக முதல்வர் அழைத்துப் பேசி உடனடி தீர்வு காணவும், நிலையாணை தொடர்பான குழுவில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டிருந்தார். இந்தநிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான, 14-வது ஊதிய ஒப்பந்த ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையானது, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், நாளை (23.08.2022) காலை 11.00 மணியளவில், குரோம்பேட்டை, மாநகர் போக்குவரத்துக் கழக பயற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையிலாவாவது முடிவு கிடைக்குமா என போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
வாக்குறுதி அளித்த அமைச்சர் பொன்முடி...! நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது ஏன்..? ராமதாஸ் ஆவேசம்