5 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்...! ஓபிஎஸ்- இபிஎஸ் அணி எப்படி இருந்தது தெரியுமா- மைத்ரேயன் தகவல்
5 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைந்த நாளான இன்று மீண்டும் பிளவு பட்டுள்ளது. இதனை குறிக்கும் வகையில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்தரேயன் டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.
அதிமுகவும் அதிகார மோதலும்
அதிமுக பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா, தமிழகத்தில் எம்ஜிஆருக்கு பிறகு யாரும் இரண்டாவது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்றதில்லை என்ற சாதனையை முறியடித்தார். இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார். இந்தநிலையில் உடல்நிலை பாதிக்கப்ட்ட ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் இழந்தார். இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டியால் ஓபிஎஸ்- சசிகலா என இரண்டாக அதிமுக பிளவு ஏற்பட்டது. அப்போது சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக பெங்களூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததையடுத்து சசிகலா சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து கூவத்தூரில் உள்ள ரிசாட்டில் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக முதலமைச்சர் பொறுப்பை சசிகலா வழங்கினார். இதனையடுத்து சில மாதங்களிலேயே சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் மேற்கொண்ட ஓபிஎஸ் அணியோடு இபிஎஸ் அணியினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஓபிஎஸ்- இபிஎஸ் இணைப்பு
இந்த பேச்சு வார்த்தை அடிப்படையில், 5 ஆண்டுகளுக்கு முன் இதே தேதியான 21/08/2017 அன்று மாலை ஓபிஎஸ்- இபிஎஸ் அணி இணைந்தது. அப்போது முதலமைச்சர் பதிவி எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் பதவி ஓபிஎஸ்க்கும் என பிரித்துக்கொள்ளப்பட்டது. இதே போல கட்சியில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து கட்சிக்குள் சிறு, சிறு மோதல் குழப்பங்கள் ஏற்பட்டு வந்தாலும் சுமார் 4 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்தது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தற்போது அதிமுகவில் மீண்டும் பிரச்சனையை உருவாக்கியுள்ளது. ஒற்றை தலைமை என்ற முழக்கம் மீண்டும் இரு அணிகளாக ஓபிஎஸ்- இபிஎஸ் பிரிந்துள்ளனர்.
5 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயா டிவிக்கு சிறப்பு பேட்டியளித்த ஓபிஎஸ்..! என்ன சொல்லிருக்காருனு தெரியுமா..?
ஓபிஎஸ்- இபிஎஸ் பிளவு
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் இணைந்த ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு தற்போது மீண்டும் பிளவு ஏற்பட்டிருப்பது அதிமுக தொண்டர்களை வேதனை அடையவைத்துள்ளது. இந்தநிலையில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்திரேயன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
<
/p>
5 ஆண்டுகளுக்கு முன் இன்று 21/08/2017 அணிகள் இணைந்தன. 5ஆண்டுகளுக்குப் பின் திருப்புமுனையில் நிற்கிறோம். தலைவர் பாடல் நினைவுக்கு வருகிறது. நேற்றொரு தோற்றம், இன்றொரு மாற்றம்.,. பார்த்தால் பார்வைக்கு தெரியாது... தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல் தூரத்தில் நின்றால் புரியாது என மைத்ரேயன் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
அதிமுக பொதுக்குழு மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணை... ! ஓபிஎஸ்..? இபிஎஸ்..? வெல்வது யார்...