அதிமுக பொதுக்குழு மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணை... ! ஓபிஎஸ்..? இபிஎஸ்..? வெல்வது யார்...

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இபிஎஸ் தரப்பினர் மேல் முறையீடு செய்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வரவுள்ளது.
 

The hearing of the appeal case in the AIADMK general committee case will be held today

அதிமுக ஒற்றை தலைமை

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து ஜூன் 23 ஆம் நடைபெற்ற பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை நிராகரித்து பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து புதிய பொதுக்குழுவிற்கான தேதியும் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்த ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ரோம் நகர மன்னன் பிடில் வாசித்ததை போல, தமிழகமே சீரழியும் போது ஸ்டாலின் போட்டோ ஷூட் நடத்துகிறார்.! ஜெயக்குமார்

The hearing of the appeal case in the AIADMK general committee case will be held today

தீர்ப்பால் உற்சாகம் அடைந்த ஓபிஎஸ்
 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூன் 23ஆம் தேதியன்று இருந்த நிலையே தொடர வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்றும், பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் ஏற்படும்பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம் என்றும் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவு ஓபிஎஸ் தரப்பை உற்சாகப்படுத்திய நிலையில், இபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்தது. இதனையடுத்து இபிஎஸ் தரப்பு அவசர ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.துரைசாமி, சவுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இபிஎஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது.

அதிமுக அழிவு பாதைக்கு செல்வதற்கு எட்டப்பன் கே.பி முனுசாமி தான் காரணம்...! அதிமுக நிர்வாகி ஆவேச கருத்து

The hearing of the appeal case in the AIADMK general committee case will be held today

நீதிமன்றத்தில் இபிஎஸ் மேல் முறையீடு

இபிஎஸ் தர்ப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பொதுக்குழு பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில், ஜூன் 23ம் தேதிக்கு முன் உள்ள நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே  இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு பட்டியலிடப்பட்ட நிலையில் இன்று காலை விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விசாரணையில் தங்கள் தரப்பு வாதங்களை இரு தரப்பும் இன்று எடுத்து கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த வழக்கு விசாரணையை ஓபிஎஸ்- இபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்வமோடு  எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

இளைஞர்கள் அனைவரும் காதலிக்க வேண்டும்.. அட்வைஸ் செய்த கே.பாலகிருஷ்ணன்.!


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios