அதிமுக அழிவு பாதைக்கு செல்வதற்கு எட்டப்பன் கே.பி முனுசாமி தான் காரணம்...! அதிமுக நிர்வாகி ஆவேச கருத்து
கட்சி அழிவுப் பாதைக்கு செல்கிறது என்றால் அதற்கு எடப்பாடியுடன் உள்ள எட்டப்பன் கே. பி. முனுசாமி தான் காரணம் என்றும், அவருக்கு வாய்தான் மூலதனம் என ஓ.பி.எஸ்.ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் மனைவிக்கு அஞ்சலி
ஒற்றை தலைமை மோதலால் ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு ஓபிஎஸக்கு சாதகமாக அமைந்த்துள்ளது. இதனையடுத்து இர தரப்பு இணைந்து செயல்பட வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் இந்த கோரிக்கையை இபிஎஸ் தரப்பு மறுத்துவிட்டது. இந்தநிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தேனி பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது மனைவியின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது மாநிலங்களைவை உறுப்பினர் தர்மர் மற்றும் வட சென்னை மாவட்ட அதிமுக நிர்வாகி கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வத்தை அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நயவஞ்சகமாக கூட்டு சேர்த்து பின்னர் காலை வாரி விட்டதாக குற்றம் சாட்டினார்.
கே.பி.முனுசாமி தான் காரணம்
ஓபிஎஸ் உடன் ஆதரவு தெரிவித்து இருந்த செம்மலை உட்பட யாருக்கும் தேர்தலில் வாய்ப்பு தராமல் ஏமாற்றியதாகவும் தெரிவித்தார். தர்மயுத்தம் நடத்திய பொழுது ஓபிஎஸ்க்கு 45 சதவீதம் பேர் ஆதரவாக இருந்ததாக கூறினார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பு, அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, 7 கோடி தமிழர்களின் எதிர்பார்ப்பு என கூறினார். ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்திய போது உடன் இருந்த கே.பி.முனுசாமி தற்போது எட்டப்பன் வேலை பார்த்ததாகவும், தொடர்ந்து கட்சியில் குழப்பம் விளைவித்து, கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு சென்றுள்ளதாக குற்றம்சாட்டினார். ஓபிஎஸ் அணியில் எடப்பாடி பழனிச்சாமியை தவிர மற்ற அனைவரும் இணையலாம் என கூறினார். எடப்பாடி பழனிசாமி திருத்த வேண்டும் இல்லையென்றால் ஒன்றை கோடி தொண்டர்களும் சேர்ந்து தான் அவரைத் திருத்த வேண்டும் என தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது ஓபிஎஸ்யை தான் நிகழ்கால பரதன் என்று கூறியுள்ள நிலையில், ஆர்பி.உதயகுமார் நேரத்திற்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக்கொண்டு பேசி வருவதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்