Asianet News TamilAsianet News Tamil

இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம், காத்திருங்கள்... ஸ்டாலின் அறிவிப்பால் அலறும் சென்னை!!!

 நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 

Chief Minister M K Stalin congratulated Chennai on its birthday
Author
Chennai, First Published Aug 22, 2022, 12:22 PM IST

சென்னைக்கு பிறந்தநாள்

சென்னை மாநகரம் உருவாகி இன்றுடன் 383 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆம், 1939 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 22 ஆம் தேதியை நாம் மெட்ராஸ் தினம் அல்லது சென்னை தினம் என்று கொண்டாடி வருகின்றோம் .வந்தாரை வாழவைக்கும் சென்னை மாநகரம் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க நினைவுகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. தமிழகத்தில் கடைக்கோடி உள்ளவர்கள் மட்டுமல்ல இந்தியாவின் எந்த பகுதிகளில் இருந்து வந்தாலும் அவர்களை அரவணைக்க செய்யுமே தவிர திரும்பி போ என கூறாத ஒரே இடம் சென்னை மட்டுமே, அப்படி பட்ட சென்னையில் பல்வேறு பழங்காலத்து கட்டிடங்கள் இன்னும் மக்களை அதிசயத்து பார்க்க வைக்கிறது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை, விக்டோரியா ஹால், சென்னை உயர்நீதிமன்றம், ராஜாஜி அரங்கம்,ராயபுரம் ரயில் நிலையம், எல்ஐசி கட்டிடம், சாந்தோம் தேவாலயம் என ஒவ்வொன்றும் அதன் வரலாற்றை கூறுகிறது.

5 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்...! ஓபிஎஸ்- இபிஎஸ் அணி எப்படி இருந்தது தெரியுமா- மைத்ரேயன் தகவல்

Chief Minister M K Stalin congratulated Chennai on its birthday

இன்னும் நிறைய சம்பவங்கள் இருக்கு

சர்வதேச கட்டமைப்புக்கு ஏற்ப, சென்னை மாநகரம் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. இப்படி, பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய சென்னைக்கு மேலும் பெருமை சேர்த்திடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் 'சென்னை தினம்' கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள சென்னை தினம் வாழ்த்து செய்தியில்,  சென்னையின் செழுமையான கலாச்சாரம், ஆன்மீகம், துடிப்பான புலமை ஆகியவற்றின் நீண்ட வரலாறு அனைத்து மக்களையும் ஈர்த்தது மற்றும் ஊக்கப்படுத்தியதாக கூறியுள்ளார்.

 

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல், இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள் என முதலமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

வாக்குறுதி அளித்த அமைச்சர் பொன்முடி...! நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது ஏன்..? ராமதாஸ் ஆவேசம்

 

Follow Us:
Download App:
  • android
  • ios