தீபாவளிக்கு பட்டாசு எந்த நேரத்தில் வெடிக்கணும் தெரியுமா.? இரண்டு மணி நேரம் மட்டுமே ஒதுக்கிய தமிழக அரசு
தீபாவளி நாளில் இந்த ஆண்டும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் படி காலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேரத்தை ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் அணைவருக்கும் நினைவுக்கு வரும், அந்த அளவிற்கு பட்டாசுகளை சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை வெடித்து கொண்டாடுவார்கள். அதிகளவு பட்டாசு வெடிப்பதால் சுற்று சூழல் மாசுப்படுவதால் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவ்வரை கடந்த 4 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், தீபாவளி பண்டிகை வருகிற 12ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்று காலை முதலே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிடுவதால் அதிக ஒலியும்,
இரண்டு மணி நேரம் ஒதுக்கிய தமிழக அரசு
காற்று அதிக அளவில் மாசுபடுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் பட்டாசுகள் வெடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும் , இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தகவல் கூறியுள்ளனர்.
இதையும் படியுங்கள்
டி.டி.எப் வாசனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன்!