மாநகராட்சி, நகராட்சி  நெடுஞ்சாலைகளில் மீண்டும் மதுபார்கள்  செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி  வழங்கியுள்ளது.

அதாவது ,தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மதுக்கடை மற்றும் மது பார்களை மூட வேண்டும் என உச்ச நீதி மன்றம்  ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது. இதன்  எதிரொலியாக மே மாதம் 1ம் தேதியில்  இருந்து  பார்கள்  செயல்படாமல்  இருந்தன.

இந்த உத்தரவால், நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஓட்டல், ரெஸ்டாரன்ட் பார்களும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுபார்கள் மூடப்பட்டதால் அரசுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என இந்திய ஓட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட்கள் சங்க கூட்டமைப்பு  அறிவிப்பு  வெளியிட்டது

தமிழகத்தில் மட்டும்  நெடுஞ்சாலை களில் இருந்து 500 மீட்டருக்குள் இயங்கிய 2,800 டாஸ்மாக் கடைகளும், ஓட்டல் மற்றும் கிளப்களில் இயங்கிய சுமார் 400க்கும் மேற்பட்ட மது பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழக அரசுக்கு சுமார் 11,000 கோடி ஆண்டு வருவாய் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டு இருந்தது

மீண்டும் மதுபார்கள் திறப்பு

இந்நிலையில், சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிளப்களில் மது பார்கள் மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மாநகாரட்சி,நகராட்சி தேசிய  நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த  நட்சத்திர ஓட்டல்கள் மற்றும்   பார்கள் மீண்டும் இன்று முதல்  செயல்பட  அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் , பார்  உரிமையாளர்கள்  சங்கம்  மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

மேலும்  இந்த தகவல், பொதுவாகவே நட்சத்திர ஓட்டலில் இயங்கும் பார்களில் மது அருந்தும் குடி  மகன்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது

மேலும் கடந்த ஏப்ரலில் மூடப்பட்ட மது பார்கள் 5 மாதங்கள் கழித்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.