The state rights of the state of Tamilnadu disappeared - R.Muthrasaran pain ...

தஞ்சாவூர்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போதைய தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளதால், மாநில உரிமைகள் பறிபோகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு கட்சியின் பட்டுக்கோட்டை நகர முன்னாள் செயலர் பி.ராஜசேகரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசியது:

“விவசாயிகளின் பயிர்க் கடன்களை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

தற்போதுள்ள தமிழக அரசு செயல்படாத நிலையில் உள்ளதால், மாநில உரிமைகள் பறிபோகிறது.

ஜி.எஸ்.டி.யால் நாட்டில் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வேலை இல்லாத நிலை உருவாகப் போகிறது. இது ஜனநாயத்துக்கு ஏற்புடையதல்ல” என்று பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி. செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவபுண்ணியம், பத்மாவதி, தஞ்சை மாவட்டச் செயலர் இரா.திருஞானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.