the school girl met love torcher in road
திருவண்ணாமலை அருகே சிறுமியை வழிமறித்து காதலிக்கும் படி வற்புறுத்திய இளைஞர் அந்த சிறுமியை நடுரோட்டில் பொதுமக்கள் மத்தியில் சரமாரியாக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த +2 படித்து வரும் 17 வயது சிறுமி பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது ரஞ்சித் என்கிற இளைஞர் அவரை வழி மறித்து உன்னிடம் ஒன்று பேச வேண்டும் என கூறியுள்ளார்.
அந்த சிறுமி அதனை சற்றும் கண்டுக்கொள்ளாமல் போனதால், சிறுமியின் கையை பிடித்து என்னை காதலிக்கிறாயா? இல்லையா? என கேட்டிருக்கிறார். சிறுமி எந்த பதிலும் கூறாததால் தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தியுள்ளார்.
தொடர்ந்து சிறுமி எதுவும் பதிலளிக்காததால், நடு ரோட்டில் அந்த சிறுமியை தன்னை காதலிக்குமாறு சரமாரியாக அடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த மக்கள் சிறுமியை மீட்டு, இந்த சம்பவம் குறித்து போலிசுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
