10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தீர்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. 9.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொது தேர்வில் 94.66% மாணவிகளும், 88.16% மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்களை விட மாணவிகள் 6.5% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல் கடந்த ஆண்டு 90.7% மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க : எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் 83% அதிகரிப்பு.. முழு விவரம் உள்ளே

3,718 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. கணிதப் பாடத்தில் 95.54% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் மாவட்ட வாரியாக 97.67% பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதே நேரம் 83.54% சதவீத தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.

10-ம் தேர்வு வெளியான நிலையில் அடுத்த என்ன படிக்கலாம் என்று மாணவர்களிடையே குழப்பம் ஏற்படும். மேலும் தாங்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு எந்த பாடப்பிரிவு கிடைக்கும், எந்த பாடப்பிரிவை படித்தால் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கும் என பல்வேறு சந்தேகங்களும் எழும். சக மாணவர்கள், பெற்றோர், உறவினர் என ஒவ்வொரும் ஒரு அறிவுரையை வழங்கி, மாணவர்களின் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தலாம்.

எனவே மாணவர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தீர்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது. என்ன படிக்கலாம் என்ற தங்கள் சந்தேகங்களை தீர்க்க உதவி மையத்தை அமைத்துள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு மாணவர்கள் என்ன பாடத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பது உள்ளிட்ட மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் 14417 என்ற உதவி மையம் பதிலளிக்கிறது என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. பெரம்பலூர் முதலிடம்.. கடைசி இடத்தில் எந்த மாவட்டம்?