The real Kala is our father - Jawahar
தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி
நடிப்பில் வெளியாகியுள்ள காலா திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி உள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. மேலும் காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை வெளியானது. உலகம் முழுவதிலும் காலை 7 மணிக்கு முதல் காட்சி வெளியானது. காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் வெளியானது.

காலா திரைப்படம் வெளியாவதற்கு முதல் நாள் வரை பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானது. இந்த நிலையில், காலா படத்தின் கதைக்கு உரிமை கொண்டாடி, 101
கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் உண்மையான காலா வாரிசு. உண்மையான காலாவான திரவியம் நாடார் வாரிசு ஜவகர்தான்
இதனை அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக திரவியம் நாடாரின் மகன் ஜவகர், பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.

அப்போது பேசிய ஜவகர், எங்கப்பாவைப் பற்றிய கதையில், ரஜினி நடித்திருப்பது எங்களுக்கு பெருமையான விஷயம்தான். ஆனாலும், அதுக்கான ஒரு சின்ன
அங்கீகாரம்கூட கொடுக்காததுதான் ஏன் என்று தெரியவில்லை என கேள்வி எழுப்புகிறார். இது குறித்து இயக்குநர் பா.ரஞ்சித்திடம் கேட்டபோது, இது கற்பனை
கதை என்று சொல்கிறார். திருநெல்வேலியில் இருந்து ஒரு மனிதன், மும்பைக்கு வந்து தமிழர்களுக்கு உதவி செய்து, தமிழர்கள் மும்பையில் பாதுகாப்பா
இருக்குறதுக்கு முக்கிய காரணமா இருந்திருக்கார்னா அது எங்கப்பா ஒருவர்தான் என்கிறார்.

இவர் பற்றிய கதைதான் என்று ஒரு கிரெடிட் கொடுப்பார்கள் என்று இவ்வளவு நாட்களாக காத்துக்கிட்டிருந்தோம். பத்திரிகையாளர் சந்திப்பிலே, ட்ரெய்லர்
ரிலீசின்போதே இது குறித்து சொல்வார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எதுவுமே அவர்கள் கூறவில்லை.

மேலும் பேசிய அவர், கூடுவாலா சேட் என்ற பட்டம் எங்க அப்பா ஒருவருக்கு மட்டும்தான் இருக்கு. இந்தியில் கூடுன்னா வெல்லம். அப்பா வெல்லமண்டி வியாபாரம் செய்து வந்தார். அதனால் அந்த பெயர் வந்தது. அதேபோல், அப்பா கொஞ்சம் கறுப்பா இருப்பாரு. அதனால் சிலர் அப்பாவை காலா சேட் என்று சொல்வாங்க. இது எல்லாமே படத்தில் வருகிறது. படத்தில் ரஜினிக்கு மூன்று மகன்கள், ஒரு பெண். இவை எல்லாமே அப்பாவுக்கு பொருந்தும் என்கிறார் ஜவகர்.

எங்கப்பா திரவியம் இறந்து 15 வருடங்களாச்சு. தன் வாழ்நாளில் 50 வருஷங்களா தமிழர்களுக்குப் போராடின ஒருத்தருக்கு அதற்கான கிரெடிட் கிடைக்காததை
கௌரவ பிரச்சனையா பாக்குறோம். அதைப் பார்த்துட்டு சும்மா இருக்கிறது ஒரு மகனா, நான் அவருக்கு பண்ற துரோகம் அதுக்காகத்தான் ரூ.101 கோடி நஷ்டஈடு
கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

எங்கப்பாவின் கதையை ரெஃபரன்ஸ வெச்சு எடுத்தோம்னு காலா பட தரப்பு சொல்லணும். ஒருவேளை அது எங்கப்பாவோட கதை இல்லன்னு வேண்டுமானாலும் சொல்லட்டும் பட ரீலீசுக்குப் பிறகு நாங்க படத்த பார்த்துட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுப்போம் என்கிறார் உண்மையான காலாவின் மகன் ஜவகர்.
