the rain come to chennai at today by weather research center

சென்னையில் ராயபுரம், மெரீனா உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழையால் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் கொளுத்தி வந்தது. கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய இந்த கத்திரி வெயில் நேற்றுடன் முடிவடைந்தது. சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு 110 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி எடுத்தது.

முதலில் கேரளாவிலும் பின்னர் படிபப்டியாக தமிழகத்திலும் இந்த மழை வெளுத்து வாங்கப் போகிறது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அந்தமானுக்கு வடக்கே வங்கக் கடலில் உருவாகியுள்ள மோரா புயலால் கேரளா மற்றும் தமிழகத்தில் நாளை முதல் மழை வெளுத்து வாங்கப் போகுது என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் முதல் கட்டமாக சென்னையில், ராயபுரம் மற்றும் மெரீனா பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

மேலும், திருவொற்றியூர், அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, சென்ட்ரல், கோயம்பேடு, அண்ணாநகர், சூளைமேடு, அரும்பாக்கம், பல்லாவரம், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி கொண்டாத்தில் உள்ளனர்.