பரபரப்பு.! சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட தீவிரவாதி.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
Chennai International Airport : தலைமறைவாக இருந்த பஞ்சாப் தீவிரவாதி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ப்ரீத்சிங். இவருக்கு வயது 26. இவர் மீது கடந்த 2020ம் ஆண்டு தேச துரோக வழக்கு மற்றும் தீவிரவாத செயல்களுக்கு எதிரான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. அவரை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர்.ஆனால் ஹர்ப்ரீத் சிங் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார். இதனால் பஞ்சாப் மாநில போலிஸ் டி.ஜி.பி ஹா்ப்ரீத்சிங்கை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார்.
இதையும் படிங்க : EPS Vs OPS : எல்லாமே முடிஞ்சுபோச்சு.! அதிமுகவை கைப்பற்றும் இபிஎஸ்..தர்ம சங்கடத்தில் ஓபிஎஸ்
அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அவா் மீது LOC போடப்பட்டிருந்தது.இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஹர்ப்ரீத்சிங் வந்தார். அவரது ஆவணங்களை கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்தபோது அவர் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிந்தது. பின்னர் ஹர்ப்ரீத்சிங்கை கையும் களவுமாக பிடித்து விமான நிலையத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.
பிறகு பஞ்சாப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு பஞ்சாப் போலீசார் சென்னை வந்து, ஹர்ப்ரீத் சிங்கை கைது செய்து பஞ்சாப் அழைத்து சென்றனர். 3 ஆண்டுகளாக போலீசிடம் சிக்காமல் வெளிநாடு சென்று ஒழிந்து கொண்டு சென்னை வந்த தீவிரவாதியை போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : Thalapathy Vijay : எங்களின் ஒற்றை தலைமையே.! அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்.!